திருச்சி சமயபுரம் கோயில் 14 நாட்கள் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 19 லட்சம்

திருச்சி சமயபுரம் கோயில் 14 நாட்கள் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 19 லட்சம்

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று(28.02.2025) எண்ணப்பட்டது. அதில் ரொக்கமாக ரூபாய் ஒரு கோடியே 19 லட்சத்து 2ஆயிரத்து 36 ரூபாய், இரண்டு கிலோ 190 கிராம்,மூணு கிலோ 430 கிராம் வெள்ளி பொருட்களாகவும் கிடைக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 273, நாணயங்கள், 1485 காணிக்கையில் கிடைத்துள்ளதாக கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14.2.2025-ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.