திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

108 வைணத்திருத்தங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 27.12.19 இன்று தொடங்கி பகல்பத்து ,ராப்பத்து என 20 நாட்கள் இப்பெருவிழா நடைபெறும்.பகல்பத்து திருவிழாவின் தொடக்க நாளான இன்று காலை 7.00 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ஜீன மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வானது 06.01.2020 அன்று நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதோடு,சிறப்பு பேருந்துகளும் இயக்கபடுகின்றன.லட்சக்கணக்கான பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்வதால் ஆயிரக்கணக்கான போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.