திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் விழா

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் விழா
108 திவ்ய திருத்தலங்களில் முக்கியமானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோவிலின் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம் இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகில் திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. 
வைகுந்த ஏகாதேசி  பெருவிழா டிசம்பர் மாதம் 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. 23ம் தேதி முதல் 2023 ஜனவரி 1ம் தேதி வரை பகல் பத்து திருவிழா நடைபெறும், 01ம் தேதி அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி அருள்வார்.

முக்கியத் திருநாளான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு 2ம் தேதி அதிகாலை 04.45 மணிக்கு நடைபெறும். இதில் ஸ்ரீநம்பெருமாள் இரத்தினங்கியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும், 8ம்தேதி ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும், 9ம் தேதி அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும், 10ம் தேதி அன்று தீர்த்தவாரியும், 11தேதி ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சமும் விழாவுடன்  வைகுண்ட ஏகாதசி நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர்கள் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்முகூர்த்த கால் நடும் விழாவில் பட்டர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO