திருச்சி விஷன் செய்தி எதிரொலி - பாதியில் நின்ற கழிவுநீர் வடிகால் பணிகள் மீண்டும் ஆரம்பம்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம் 1வது வார்டு மூலத்தோப்பு மலையப்ப நகரில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஆனால் 4 மாதங்களாக ஒப்பந்ததாரர் 35' மீட்டர் நீளம் கொண்ட பணிகளை கிடப்பில் போட்டனர். இதனால் சுமார் 35' மீட்டர் நீளம் கொண்ட வடிகாலை மெயின் வடிகாலுடன் இணைக்கபடாமல் இருந்ததால் பாதி வழியில் நின்றதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் அப்படியே தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் பல இன்னலுக்கு ஆளாயினர்.
இதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் மக்கள் படும் சிரமத்தை திருச்சி விஷன் செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக பாதியில் நின்ற கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோட்டம் 1வது வார்டு மூலத்தோப்பு மலையப்ப நகர் மக்களின் கோரிக்கை குறித்து செய்தி வெளியிட்டு தீர்வு ஏற்படுத்திய திருச்சி விஷன் நிர்வாகத்திற்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision