திருச்சி பெண் காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி பெண் காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தஞ்சை மாவட்டம்பட்டுக் கோட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன் (58). இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் நகர செயலாளர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராஜசேகரன் கடந்த 25 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தார்.

இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி கடந்த 22-ந் தேதி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், ராஜசேகரனின் நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர் ராஜசேகரன், அவரு டைய மனைவி லட்சுமி ஆகியோரை விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு வியாபாரிகள் உள்ளிட்டோர் முயற்சியால் நேற்று முன்தினம் ராஜசேகரன், அவரது மனைவி ஆகி யோர் வீட்டுக்கு திரும்பினர். 

இருப்பினும் ராஜசேகரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதனைய டுத்து அவர் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் செட்டியக்காடு என்ற பகுதிக்கு சென்ற அவர் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மன வேதனை அடைந்த நகைக் கடை உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசாரை கண்டித்து திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, நகைக்கடை உரிமையாளர்கள், பொற்கொல்லர் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ராஜசேகரன் உடல் வைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா சங்கரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn