பள்ளி திறப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சுகாதார அம்சத்தில் கோட்டை விட்ட திருச்சி மாநகராட்சி - பொதுமக்கள் ஆதங்கம்

பள்ளி திறப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சுகாதார அம்சத்தில் கோட்டை விட்ட திருச்சி மாநகராட்சி - பொதுமக்கள் ஆதங்கம்

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மலர்கள், மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

 ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு மலர்கள் அளித்தனர். வகுப்புகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

 மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு அறிவுறுத்தலின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆசிரியர்கள் செய்து இருந்தனர் .

ஆனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பள்ளியிலிருந்து மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்பதை கண்டுகொள்ளாமல விட்டுவிட்டதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

வாசலிலேயே தண்ணீர் தேங்கி சேரும் , சகதியுமாக உள்ளதால் மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்ல மிகவும் அவதிபட்டார்கள். திருச்சி மாநகராட்சி நிர்வாகம் செந்தண்ணீர்புரம் பள்ளியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn