சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நிதிஉதவியை எதிர்நோக்கும் திருச்சி வீரர்

சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நிதிஉதவியை எதிர்நோக்கும் திருச்சி வீரர்

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கிருஷ்ணன் தன்னுடைய சிறுவயதில் இருந்தே பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கியுள்ளார். விபத்தில் தன்னுடைய கால்கல் பாதிக்கப்பட்ட நிலையிலும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து பாரா பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி  வெண்கலம் போன்ற பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
மாவட்ட, மாநில் அளவில் சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

உலக பூப்பந்த அமைப்பு  தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 81வது இடத்தையும் இரட்டையர் பிரிவில் 69 வது இடத்தில் உள்ளார். தற்போது சர்வதேச அளவில் ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள பாரா பேட்மிட்டன் போட்டி, ஜூன் மாதம் உகாண்டாவில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டி மற்றும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறும் பாரா பேட்மிட்டன் போட்டியில்

பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது எனினும், பொருளாதார பிரச்சினை காரணமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளையாட்டு வீரர் கார்த்திக் கிருஷ்ணாவிடம் பேசிய போது அவர் கூறுகையில், சர்வதேச அளவில் மூன்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த போதும் என்னுடைய பொருளாதாரம் என்னை அங்கு செல்ல இயலாத இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது.

விளையாட்டு துறையில் குறிப்பாக பாரா பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்டு உலக அளவில் பெயர் பதிக்கவேண்டும் என்பதே என் லட்சியம். மூன்று போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு ரூபாய் 4,27,000 நிதி தேவைப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்வதற்கான நிதி உதவியை  தனியார் அமைப்புகளிடம் கேட்டுள்ளேன் என்றார்‌. நிதி உதவி அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்  +9195249 58757.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn