சாலைகளை சீரமைக்க களமிறங்கிய திருச்சி மாநகர காவல்துறை

சாலைகளை சீரமைக்க களமிறங்கிய திருச்சி மாநகர காவல்துறை

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் மழையால் பாதிக்கப்பட்டு சிதலமடைந்த சாலையை சரிசெய்ய காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் மாநகர பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய சுற்று பகுதிகளிலும், அண்ணாசிலை ரவுண்டானா, W.B ரோடு உள்ளிட்ட சாலைகளிலும் மெயின்ரோட்டிலும் காந்திமார்க்கெட் தற்காலிகமாக காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி மண்களை கொட்டி சாலையை சீர்செய்து பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இது போன்று கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா, ராக்கின்ஸ் ரோடு, ஸ்டேட் வங்கி மெயின்ரோட்டிலும், தில்லைநகர் காவல்நிலைய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரகாளியம்மன் கோயில் முதல் அண்ணாநகர் மற்றும் சாஸ்திரி ரோடு வரை உள்ள சிதலமடைந்த சாலைகள் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 

திருச்சி மாநகர காவல் ஆணையர் மழை நேரங்களில் சாலையில் மோட்டர் வாகனங்களில் செல்வோரை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தும் பாதுகாப்பாக வாகனங்களில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn