திருச்சி கடைவீதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் - மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பேட்டி
தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி திருச்சி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக காவல் உதவி மையத்தினை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்சி மாநகர பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு தெப்பக்குளம் பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள், 800க்கும் மேற்பட்ட காவலர்கள் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது .
100 க்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளுக்கு வரும் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும். திருச்சி மாநகரத்தில் 95 சதவீத காவலர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 5% பேர் உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செலுத்திக் கொள்ளவில்லை.
திருச்சி மாநகரத்தை பொருத்தவரை 1051 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் அவை பழுது நீக்கம் செய்யப்பட்டு விட்டது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளது என்றார்.
முக்கிய வீதிகளில் தற்காலிக
தரைக்கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருச்சியில் முதன் முறையாக தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. முதன்முறையாக கடைவீதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி செயல்படுத்தப்படுகிறது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn