ஸ்ரீரங்கம் கோவிலில் திரிபுரா ஆளுநர் தரிசனம்- கெடுபிடி பாதுகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் திரிபுரா மாநில ஆளுநர் இந்திர சேனா ரெட்டி நல்லு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது...
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர்.
அந்த வகையில் திரிபுரா மாநில ஆளுநர் இந்திர சேனா ரெட்டி நல்லு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று வருகை தந்தார்..
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி மூலவர் பெரிய பெருமாள் சன்னதி தாயார் சன்னதி உள்ளிட்ட உப சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார்..
அதனைத் தொடர்ந்து திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பெருமாள் புகைப்படம் மற்றும் பெருமாள் சந்தன அபய ஹஸ்தம் நினைவு பரிசாக வழ ங்கப்பட்டது..
ஆளுநரின் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலம் காவலர்கள் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision