ரேஷன் அரிசி கடத்திய இருவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்

பெரம்பலூர் குன்னம் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சி. ஷ்யாமளா தேவி உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர் வின்சென்ட் மற்றும் ஆய்வாளர் அரங்கநாதன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார், குன்னம் தாலுகா வட்ட வ வழ ங்கள் அலுவலர் மற்றும் காவலர்கள் ஆகியோருடன் அரிசி மற்றும் அத்தியாவசியம்உணவு பொருள் கடத்தல் சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்டம்
குன்னம் தாலுகா அந்தூர் மாரியம்மன் கோயில் அருகில் கண்காணித்த போது அங்கு நின்று கொண்டிருந்த Bolero Pick up நான்கு சக்கர வாகனத்தை தணிக்கை செய்த போது அதில் 17 முட்டைகளில் சுமார் 850 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையில் கடத்தியவர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரதேசி மகன் தங்கராஜ் வயது 37 மற்றும் திருச்சி மாவட்டம் சந்தியாகப்பர் பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய ரமேஷ் மகன் அபிஷேக் சாமுவேல் வயது 19 என்றும் இவர் குன்னம் தாலுகா வரகூர் ஓலைப்பாடி அந்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு இரவு நேர டிபன் கடைக்காரர்களுக்கு மற்றும் கால்நடை தீவனத்திற்கு விற்பது தெரிய வந்தது
இதனை அடுத்து போலீசார் வடக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய Bolero Pick up நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு TVS XL இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் இருவரையும் கைது செய்து பெரம்பலூர் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆர்டர் செய்து உத்தரவுபடி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision