நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி, வீச்சரிவாளுடன் காரில் சுற்றிய இரண்டு பேர் கைது

நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி, வீச்சரிவாளுடன் காரில் சுற்றிய இரண்டு பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெட்டவாய்த்தலை காவல் நிலைய சரகத்தில், கடந்த (15.10.2024)-ம் தேதி இரவு 22:30 மணியளவில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 3 காவலர்கள் இரவு ரோந்து அலுவலில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வெள்ளை நிற காரில் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர் திருச்சி சாலையில் வருவதாக பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தபோது. அவ்வழியாக வந்த TN 28 BC 8283 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற Maruti Suzuki Breeza காரை நிறுத்த முற்பட்ட போது, காரை நிறுத்தாமல் வேகமாக சென்று அருகில் இருந்த போலீஸ் பேரிகார்டில் மோதி நின்றது.

உடனே, உதவி ஆய்வாளரும், காவலர்களும் காரின் அருகே சென்ற போது, காரில் இருந்து வீச்சருவாளுடன் இறங்கிய நபர், போலீஸாரை பார்த்து தான் பெரிய ரவுடி என்றும், நான் தான் குமுளி ராஜ்குமார். என் காரையே நிறுத்துவிங்களா என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளார்.

மேற்படி, காரில் 5 நபர்கள் இருந்ததால் ஜீயபுரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி, இரவு ரோந்து அதிகாரியான இராம்ஜிநகர் காவல் ஆய்வாளரும், பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளரும் இணைந்து மேற்படி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்து கண்காணித்து சென்று. (16.10.2024)-ம் தேதி 15:30 மணிக்கு பரமக்குடி, ஆதியேந்தல், கண்மாய்கரை அருகே காரில் இருந்த மேற்படி நபர்களான

தச்சநல்லூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான குமுளி ராஜ்குமார் 45/24 த.பெ பெருமாள், அம்மன் கோவில் தெரு, மேலக்கரை, தச்சநல்லூர், திருநெல்வேலி மாவட்டம் (தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தலைவர்) எனவும், முன் இருக்கையில் இருந்த நபர் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்ரமணியன் த.பெ முத்து. இனுங்கூர், குளித்தலை தாலுகா, கரூர் மாவட்டம் எனவும் தெரியவந்தது.

பின்னர். மேற்படி நபர்களை கைதுக்கான காரணம் கூறி, கைது செய்து மேற்படி காருடன் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காரை சோதனை செய்து பார்த்த போது அதில் நாட்டு துப்பாக்கிகள் -2, வீச்சரிவாள்-2, சணல் வெடிகள் 25 ஆகியவை காரில் இருந்து கைப்பற்றப்பட்டு, 104/24, U/s 296(b), 132, 351(3) BNS r/w 3 of TNPPDL Act & 25(1)(a) of Arms Act & 4, 5 of Explosives Act-6ör வழக்கு பதிவு செய்யப்பட்டு. குமுளி ராஜ்குமார் மற்றும் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்பிரமணியன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது என்று திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision