தள்ளுவண்டி கடை புரோட்டா மாஸ்டரை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

தள்ளுவண்டி கடை புரோட்டா மாஸ்டரை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (23.05.2024)-ந் தேதி அதிகாலை பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை மெயின்ரோடு, அரசு போட்டோ ஸ்டுடியோ முன்பு, தள்ளுவண்டி கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்பவர் படுத்து உறங்கி கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து, பணம் தர மறுக்கவே, ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் தில்லைநகர் ஆழ்வார்தோப்பை சேர்ந்த ஹக்கிம் (25), த.பெ.ரஹமத்துல்லா மற்றும் தென்னூர் அண்டகொண்டான் தெருவை சேர்ந்த ராஜசேகர் (24), த.பெ.ராமசாமி ஆகியோர்கள் மேற்கண்ட கொலை சம்பவத்தில் ஈடுப்பட்டது தீவிர விசாரணயில் தெரியவந்து, மேற்கண்ட இரண்டு எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிரிகள் ஹக்கிம் மற்றும் ராஜசேகர் ஆகியோர்களின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து, எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் ஆயுதங்களை கொண்டு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision