திருச்சி நகரத்தின் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் - சரிசெய்ய கைகோர்க்கும் சர்வதேச அமைப்பு

திருச்சி நகரத்தின் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் - சரிசெய்ய கைகோர்க்கும் சர்வதேச அமைப்பு

திருச்சி மாவட்டத்தின் முக்கியமான பிரச்சனைகளாக, போக்குவரத்துகான சாலை பிரச்சனைகள் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் காவேரி ஆற்று நீரையே நம்பியிருப்பது மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் சரியான முறையில் செயல்படாமல் இருப்பது போன்றவை உள்ளது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளுடன், உள்ளூர் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கான சர்வதேச கவுன்சில் ( ICLEI ) தயாரித்து வெளியிட்ட காலநிலை மாற்ற நகர செயல் திட்டம் ( CRCAP ) கைகோர்த்துள்ளது.

இதன்மூலம் மேற்கூறியுள்ள பிரச்சனைகளை சரிசெய்வதற்கான பணிகளை இணைந்து செயல்பட உள்ளனர். காலநிலை மாற்ற நகர செயல் திட்டத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போக்குவரத்து, குடியிருப்பு கட்டிடங்கள், கழிவு மேலாண்மை மற்றும் தெரு விளக்குகள் போன்ற துறைகள் மிகப்பெரிய பசுமை இல்ல வாயுக்களை (GHGs) வெளியிடுகின்றன.

நீர், போக்குவரத்து, பல்லுயிர், மழை நீர், கழிவுநீர் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஆறு வகைகளின் கீழ் பல்வேறு சவால்கள் உள்ளதாக அறிக்கை ஒவ்வொன்றாக வகைப்படுத்தி கூறியுள்ளது.இதில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துவது, அனைத்திற்கும் காவேரி ஆற்று நீரை மட்டும் நம்பியிருக்காமல் இருப்பதற்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது. கூடவே நம் நகரத்தில் பசுமை இல்ல வாயுவில் குறிப்பிடத்தக்க அளவிற்கான குறைப்பு ஏற்படுத்துதல் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், மின்சாரம், நீர் போன்றவற்றை சரி செய்ய ஊக்குவிக்கிறது. திருச்சி மாநகருக்கு 18 இடங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க நகர்ப்புற காடுகளை உருவாக்க வேண்டும்.

சுற்றுப்புற காற்றின் தரத்தை நிர்ணயிக்க கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கவும், தீர்வு நடவடிக்கைகளை எடுக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கட்டிடங்களில் மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்தி இடமாக மாற்றியமைத்ததனால் 1,138 டன் கார்பன் டை ஆக்சைடு அளவிற்கு பசுமை இல்ல வாயு குறைக்கப்பட்டது உள்ளாட்சி அமைப்பை அறிக்கை பாராட்டியுள்ளது. இதனை தவிர சாலைகளை சரி செய்ய தேவையான திட்டங்களையும் அறிக்கை வழங்குகிறது.

இதனை தவிர மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை அதிகமாகவும் பசுமை இல்ல வாயுக்கள் ஜீரோ அளவிற்கான உமிழ்வை அடையவும் உள்ளூர் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கான சர்வதேச கவுன்சில் ( ICLEI ) பல்வேறு திட்டங்களை முன்மொழிய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision