123 ஆண்டுகளில் 3ம் முறையாக கேரளாவை கைவிட்ட வருணபகவான்
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இருப்பினும் பருவமழையின் முதல் கட்டம் செப்டம்பருடன் முடிவுக்கு வந்தது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்திருக்க வேண்டிய மழை அளவு 201.86 செமீ. ஆனால் அங்கு பெய்துள்ள மழை அளவு 132.61 செமீ. இது கடந்த 123 ஆண் டுகளில் மிக மோசமான பருவமழையாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு பருவ மழை மிக மோசமாகி ஏமாற்றிய ஆண்டுகள் 1918 மற்றும் 1976 ஆகும்.
இந்த ஆண்டு ஆகஸ்டில் மழை மிக மோசமாக பதிவானது. 44.5 செமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் பெய்த மழை வெறும் 6 செமீதான் பெய்துள்ளது. ஆனால் செப்டம்பரில் அதிகமாக பெய்துள்ளது. இயல்பாக பெய்திருக்க வேண்டிய மழை 27.2செமீ. ஆனால் பெய்திருப்பது 41.4 செ.மீ, ஜூன் மாதத்தில் கேரளாவில் 26.03 செமீ தான். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட சராசரி அளவு 64.8 செமீ. மிகக்குறைந்த மழை என்றால், வயநாட்டில் 55 சதவீதமும், இடுக்கியில் 54 சதவீதமும் மழை பெய்தது. அதே நேரத்தில் இடுக்கியில் பெய்னாவு நகரில் அதிகபட்சமாக 434.9 செமீ மழை பதிவாகி உள்ளது.
கேரளாவில், முதல் கட்டத்தில் பருவ மழை ஏமாற்றினாலும், 2வது கட்டத்தில் துலாவருஷம் என்று அழைக்கப்படுகிற இந்த பருவமழையின் 2வது கால கட்டம் (அக்டோபர்/டிசம்பர்) சராசரி மழையை விட அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision