விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு (விசர்ஜனம்) - மாநகர காவல்துறை கொடி அணி வகுப்பு.

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு (விசர்ஜனம்) - மாநகர காவல்துறை கொடி அணி வகுப்பு.

திருச்சி மாநகரத்தில் வருகின்ற (07.09.2024)-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் (09.09.2024)-ம்தேதி சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

இன்று (03.09.2024)-ந் தேதி உறையூர் மாலை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நாச்சியார்கோவில் சந்திப்பில் தொடங்கி, பணிக்கன்தெரு, புதிய பணிக்கன்தெரு, முஸ்ஸிம் தெரு, வெக்காளியம்மன்கோவில், தேவர்சிலை, நாடார் தெரு, காளையன் தெரு, டாக்கர்ரோடு, நாச்சியார்கோவில் சந்திப்பு வழியாக உறையூர் காவல்நிலையத்தில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.

மேற்கண்ட கொடி அணி வகுப்பினை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, முன்னின்று நடத்தி சென்றார்கள். இதில் காவல்துணை ஆணையர் வடக்கு, கூடுதல் துணை ஆணையர் (மாநகர ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆய்வு மேற்க்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision