போக கூடாத இடத்திற்க்கு போய்விட்டோம் பொது சேவையுடன் நடைபெற்ற திருமண விழாவில் எம்.பி சூடான பேச்சு
திருச்சியில் (11.09.2022) அன்று நடைபெற்ற திருமண விழாவில் வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.சத்யநாத உடையார் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு விழாவில் 'வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்..! இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்..!' என்ற வாசகத்துடன், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை மணமக்களான ச.ரோஷிணி ராய் - ரா.ஜெரோம் ஜோஸ்வா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த மையத்தில் திருமணத்திற்க்கு வந்திருந்தவர்கள் இலவசமாக வாக்காளர் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர்.
இந்த முகாம் குறித்து வரவேற்பு அழைப்பிதழில்..... இரு மனங்கள் ஓர் மனமாய் இணையப் பெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் ஒரு சமுதாய அக்கறையோடு ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணியை மனமகிழ்வோடு செய்ய உள்ளோம். நமது சொந்த பந்தங்கள் அனைவரும் வரவேற்பு விழா அரங்கில் இதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள பூத்தை பயன்படுத்தி இணைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
இந்நிகழ்ச்சியை நமது அன்பிற்கினிய புதுமணத் தம்பதியினர் துவங்கி வைக்க உள்ளனர். அனைவரும் விழாவிற்கு வரும்பொழுது ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையயும் எடுத்து வரவும் என குறிப்பிட்டிருந்தனர்.
இத்திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தர் வாழ்த்தி பேசிய போது...... தலைமை பொறுப்பு நிரந்தரமானது அல்ல. பதவியில் இருப்பவர் சமூகத்திற்கு என்ன செய்தோம் என்பதை பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும். 5 முறை தலைவராக இருப்பவரால் என்ன செய்ய முடியுமோ..! அதை 2 முறை தலைவராக இருந்த சத்தியநாதன் சாதித்துள்ளார்.
இந்த திருமண விழாவில் சங்க மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்த்த கட்சியினர் கல்யாண மேடைகளில் பேசிதான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். சாதி இல்லை என்று சொல்பவர்கள், தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ..! அந்த சாதியை சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். நான் பாஜக கூட்டணியில் 2.40லட்சம் வாக்குகள் பெற்றேன். பின்னர் மாற்று கூட்டணியில் 2.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்திற்கு போய் இருக்க வேண்டாம். நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன்.
நாங்கள் அவசரப்பட்டு விட்டோம் என திமுக மறைமுக சாடினார். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது வேதனைப்படுவதாக பேசிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO