அரியமங்கலம் உக்கடை பாலத்தில் மக்கள் நடப்பதற்கு வழி பிறக்குமா? - திருச்சி SDPI கட்சியினர் தொடர் கோரிக்கை!

அரியமங்கலம் உக்கடை பாலத்தில் மக்கள் நடப்பதற்கு வழி பிறக்குமா? -  திருச்சி SDPI கட்சியினர் தொடர் கோரிக்கை!

திருச்சி உக்கடை அரியமங்கலம், உக்கடை சந்தப்பேட்டை மலை, காயிதே மில்லத் நகர், அஞ்சுமன் நகர் பகுதி மக்கள் பிரதான சாலைக்கு வர வேண்டுமானால் அரை கிலோ மீட்டர் சுற்றிதான் வர வேண்டிய ஒரு கடினமான சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் எதேனும் தீ பிடித்தாலோ ,மக்களின் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே வருவது இயலாமல் உள்ளதால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் கனரக வாகனங்கலும் உள்ளே வர முடியாது போன்ற சூழ்நிலையில் இந்த பகுதி மக்கள், தங்கள் சொந்த செலவில் அருகிலுள்ள உய்யகொண்டான் வாய்க்கால் குறுக்கே சிறிய பாலம் ஒன்று அமைக்க முடிவு செய்து அதிகாரிகளை அணுகியபோது இந்தப் பகுதியில் பாலம் அமைக்க சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறி தற்சமயம் இங்கு பாலம் அமைக்க முடியாது என கூறிவருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் SDPI கட்சி நிர்வாகிகளை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மூன்று முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இன்று SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் இமாம் R ஹஸ்ஸான் பைஜி தலைமையில் பாலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக பாலத்தை புதிதாக சீரமைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை மாவட்ட தலைவர் எஸ்.எஸ் ரஹ்மத்துல்லா, SDTU தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் மீரான் மொய்தீன், திருவெறும்பூர் தொகுதி தலைவர் இஸ்மாயில் ராஜா, மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் கிழக்கு தொகுதி தலைவர் சுஹைப், திருவெறும்பூர் தொகுதியின் செயலாளர் தமீம் அன்சாரி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் அரியமங்கலம் பகுதி பிரமுகர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO