திருச்சி IIMல் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி IIMல் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

IIM திருச்சிராப்பள்ளியில் இன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் women's Leadership " என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.விழாவின் தொடக்கமாக விளக்கு ஏற்றி பேராசிரியர் சரவணண் அவர்கள் (மாணவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்) வரவேற்புரை அளித்தார்.


 டாக்டர் பவன் குமார் சிங்   திருச்சிராப்பள்ளிIIM இயக்குனர்  சிறப்பு விருந்தினரை வரவேற்றதோடு விழாவில் பேசிய அவர் பெண்கள் என்பவர்கள் நாம் எப்போதும் வியந்து பார்க்க கூடிய அளவில் சாதனை செய்பவர்கள் இவர்கள்தான்  ஆதிசக்தி உலகில் இருக்கும் அனைத்து சக்திகளும் இவர்களுக்குள் இருக்கின்றது இவர்கள் தான் நம்முடைய இந்த உலகத்தில் மைய சக்தியாக விளங்குவதாகவும்  கூறினார் .


பின்பு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பு விருந்தினர்களும் காணொளி மூலமாக தங்களுடைய கருத்தை பகிர்ந்து கொண்டனர். முதலில் பேசிய சிறப்பு விருந்தினர்  16 வயதுடைய தொழில்முனைவோர் மற்றும் புது டெல்லி Vasant valley மாணவி  பிரார்த்தனா பட்றா மாணவர்களோடு பகிர்ந்து கொண்டது.நாம் இந்த சமுகத்தில்  முதலில் பெண்களுக்கான விதிமுறைகளை மாற்றப்படவேண்டும். இவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கான உரிமைகள் இருக்கும் பட்சத்திலேயே பெண்களுக்கான முன்னேற்றமானது அமையும்.நாம் எப்போது பெண்கள்  அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை எப்பொழுது வருகிறதோ அப்பொழுது தான் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.

பெண் விடுதலை என்பது கிடைத்துள்ளது என்பதை நாம் உணர முடியும் என்றும் கூறியுள்ளார்.அடுத்து பேசிய  அனோஷ்கா அத்யா Lajja diaries நிறுவனத்தின்  இயக்குனரான விழாவில் தன்னுடைய உரையை மாணவர்களுக்கு வழங்கினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது மாணவர்களிடையே ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் பெண்கள் உணரவேண்டும். பெண்களுக்கு சம உரிமை வழங்குவது மற்றும் குறிப்பாக குறிப்பாக இன்றைய கார்ப்பரேட் உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும். அநீதிகளுக்கு மேலும் பெண்கள் எவ்வாறு இந்த உலகில் போராடி வென்றெடுக்க முடியும் என்பதை பற்றி பேசினார்.

   உலகில் சாதித்த பெண்மணிகள் பிற பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தும் அவர்களுக்கு தைரியத்தை அளித்தும் அவர்களுடன் உறுதுணையாக இருப்போம் என்று அவர்களுக்கு நம்பிக்கையை எடுத்து வைக்கும் பட்சத்தில் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இறுதியாக பேசிய பத்மஸ்ரீ டாக்டர் ஜானகி பல்டா மெக்கிலிக்கன்  நிறுவனர் மற்றும் தலைவர் ஜிம்மி மெக்கிலிக்கன்   jimmy MCglligan foundation அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டது என்னவென்றால் முதலில் பெண்களுக்கான விடுதலை பற்றி பேசுவதற்கு முன்பு ஆண்களுக்கு தான் இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு பெண்ணை எவ்வாறு நடத்த வேண்டும் எவ்வாறு போற்ற வேண்டும். சம அளவில் அவர்களை மதிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவு ப்படுத்தி விட்டால் சமூகத்தில் நடக்கும் பல அநீதிகள்  தடுக்கப்படும்.  

சமுகத்தில் Beti Bachao betii padhoa உருவாக்கியபோது வெற்றி பெறாததற்கு இதுவே காரணமாக அமைந்துள்ளது.
 இருவரையும் சம அளவில் நடத்த வேண்டும் இருவருக்குமான அன்பும் மரியாதையும் அவர்களுக்கு சம அளவில் கிடைக்கும் போதுதான் அவர்கள் சமமானவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு தோன்றும் சிறு  வயதிலிருந்தே குழந்தைகள் கடைசியாக விழாவின் நிறைவு பகுதியாக டாக்டர் விஜயா துணைப் பேராசிரியர் IIM திருச்சிராப்பள்ளி  ,அனைவருக்கும் நன்றி கூறி விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கும்  நன்றி கூறி  விழாவினை நிறைவு செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I