கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட பிஷப் ஹீபர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள பணிக்குழு

கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட பிஷப் ஹீபர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள பணிக்குழு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றிட ஒரு குழுவை நிறுவியுள்ளனர். இக்குழுவின் தொடக்க விழாவை நேற்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் CSI பேராயர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

இவர்கள் உதவும்  பல பிரிவுகள் குறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரியின் சமுகபணித்துறையின் தலைவர் ரெல்டன் கூறுகையில்.... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த அளவில் உதவிட வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஆறு பிரிவுகள் கீழ்  உதவிடும் முயற்சியை தொடங்கியுள்ளோம்.

TASK FORCE AGAINST COVID-19 என்று உணவு, மருத்துவமனையில் படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள், இறந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்கான தேவையான உதவிகள், வழிபாட்டு ஆலோசனை, உளவியல் ஆலோசனை ஆகியவைகளுக்கு இக்குழுவை ஒருங்கிணைத்து உள்ளோம். இக்குழுவில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர்  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும் மற்றும் பல மாவட்டங்களில் எங்கள் குழுவை சேர்ந்தவர்கள் நண்பர்களின் உதவியோடும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிட இருக்கின்றோம். உதவி தேவைப்படுபவர்கள் கல்லூரியின் தொலைபேசி எண்ணை அழைக்கலாம். இந்த தொலைபேசி எண்ணில் ஒரே நேரத்தில் 30 அழைப்புகளை பெற முடியும் என்பதால் பல மாவட்டங்களில் உதவி தேவைப்படுபவர்கள் உதவிட இருக்கின்றோம்.

தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் நேரடியாக  உணவினை வழங்க தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். எங்களால் முடிந்த உணவுத் தேவையை இருப்பவர்களுக்கு நேரடியாக சென்று உதவிடவும் குழுவின் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் உணவு தேவை அதிகமாக இருப்பின் கல்லூரி வளாகத்தில் உணவை தயார் செய்யவும் இருக்கின்றோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK