திருச்சியில் இந்திய குழந்தைகள் மருத்துவ குழுமம் சார்பில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் இந்திய குழந்தைகள் மருத்துவ குழுமம் சார்பில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய குழந்தைகள் மருத்துவ குழுமம் திருச்சி பிரிவின் சார்பாக உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது . உலகெங்கிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது .

ஏப்ரல் 2ஆம் நாள் ஆட்டிசம் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் தங்கவேல் மற்றும் மருத்துவர் சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு வந்திருந்த ஆட்டிஸம் உள்ள குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நீல நிற ஆடை அணிந்து வந்து இந்த விழாவினை சிறப்பித்தனர். விழாவிற்கு 50 ஆட்டிசம் குழந்தைகளும் அவருடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும்  வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் தங்கள் திறமைகளை ஆடல் பாடல் மற்றும் கதை சொல்லுதல் போன்ற கலைகளின் வாயிலாக வெளிப்படுத்தினர்.

குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆட்டிஸம் பாதிப்படைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினர். அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. அதன்பின் ஆட்டிசம் குழந்தை வளர்ப்பு கையேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாக ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் அனைவரின் முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 5 சிறப்பு பள்ளிகள் பங்கேற்றன. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது இந்த கொண்டாட்டத்தின் மையக் கருத்தாக இருந்தது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9


#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO