உலக சுற்றுச்சூழல் தினம் - திருச்சியில் 50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினம் - திருச்சியில் 50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலத்தில் 50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி உரையாடினார்.

அப்போது மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து பேசினார் தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரக்கன்று வழங்குகிறோம் இதனை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு மரக்கன்றை வழங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர் இந்த மரக்கன்று 5 வருடத்திற்கு பின்பு மரமாக வளர்த்து அதிலிருந்து மாகனியை எனக்கு கொண்டு வந்து தர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனமங்கலம் பகுதியில் மிகப்பெரிய மரங்களை வளர்த்து அடர்ந்த காடு போன்று இரண்டு புறங்களும் மரங்களை வளர்ப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சனமங்கலம் பகுதியில் உள்ள தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ள இடத்தினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் வேளாண் துறை அதிகாரிகள் சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சீனிவாச பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision