‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ - சுற்றுலா குறித்த விழுப்புணர்வு வேண்டும்!!

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ - சுற்றுலா குறித்த விழுப்புணர்வு வேண்டும்!!

நிலவியல், வரலாறு, கலாசாரம் என பிரிந்திருக்கும் உலகில் எல்லாரையும் ஒன்றிணைத்து சேர்ப்பதில் பாலம் போல செயல்படுவது சுற்றுலா தான்.. அங்கோன்று இங்கொற்றுமாய் பரவியிருக்கும் மக்களை இணைக்கும் சுற்றுலாவிற்கு இன்று கொண்டாட்ட தினம் என்பதால் உலக சுற்றுலா தினம் குறித்து பகிர்கிறார் தனியார் நிறுவன சுற்றுலா மற்றும் உபசரிப்பு பயிற்றுனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கபிலன் ராமராஜன்......

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்றுலா மீதான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா தினத்திற்கான மைய கருத்து "Tourism and Peace" (சுற்றுலாவும் அமைதியும்) என்பதாகும். 

இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் சுற்றுலா மூலம் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பது தான். நம்முடைய முன்னோர்கள் அப்பொழுதே ‘யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியுள்ளனர்’ அதாவது அனைவரும் அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை பற்றியும், கலாசாரத்தை பற்றியும் தெரிந்து கொள்ளும் போது மனிதம் தான் சிறந்தது என்றுணர்வார்.

நமது ஊர் பெருமையை நாம் மார் தட்டி கொள்ளலாம் ஆனால் அடுத்த ஊர்க்காரர் வந்து சொல்ல வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது சுற்றுலா தான். ஒரு மனிதன் பல இடங்களுக்கு சென்று அடுத்த ஊரின் பெருமையை கூறும்போது அந்த ஊரின் பெருமை பலருக்கும் சென்று சேர்வதுடன், ஒவ்வொரு மனிதனின் குணமும் நற்குணமாக மாறும்.

இந்தியாவின் சுற்றுலா ஈடு இணையற்றது, தமிழ்நாட்டின் சுற்றுலா ஒரு பொக்கிஷம், திருச்சியில் காணாகிடைக்காத பல சுற்றுலா தலங்கள் உள்ளது. நம் ஊரின் பெருமையை நாம் அனைவருக்கும் எடுத்துரைப்போம், இவ்வாறு செய்வதால் நம் ஊரின் பெருமையை பார் போற்ற செய்யலாம்.

உலக சுற்றுலா தின வாழ்த்துக்கள்!!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision