திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (32). இந்த தம்பதியினருக்கு லித்திஸ் என்கிற 3 வயது குழந்தையும், ஒரு கை குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சுரேஷ் தனது மகனான லித்திஸ் உடன் காளிப்பட்டி கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சேலம் மாவட்டம் பொட்டியாபுரம் கிராமத்தில் இருந்து அம்மாபட்டி கிராமத்திற்கு செங்கல் ஏற்றி வந்த லாரியின் பின் சக்கரத்தில் நிலைதடுமாறி சுரேசும், அவரது 3 வயது மகனும் விழுந்துள்ளனர்.
இதில் லாரியின் பின் சக்கரத்தில் லித்திஸ் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments