Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிப்ரவரி 12 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்- திருச்சி மாவட்டத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது

அனைத்து மத்திய தொழிற்சங்கம் -ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து பிப்ரவரி 12 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி திருச்சி மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில், ஆலை வாயில்களில் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகரில் பிப்ரவரி 2ல் துவங்கிய நடைபயண பிரச்சார இயக்கம் பிப்ரவரி 8ல் உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் தலைமையில் துவங்கியது.

உறையூர் கடைவீதி, சாலை ரோடு வழியாக ஜெயந்தி பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. தொமுச மாவட்ட செயலாளர் ஜோசப் நெல்சன், ரவீந்திரன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் நடராஜா, துணைத் தலைவர் சிவா தரைக்கடை சங்க மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி நகர விற்பனை குழு பிரதிநிதி சுமதி சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைவர் சீனிவாசன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சிவசூரியன் ,செழியன் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மாநகரப் பகுதி மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பிப்ரவரி 12ல் ரயில் நிலையங்கள், ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊர்வலமாக சென்று மறியல் செய்து ஆயிரக்கணக்கில் கைதாக உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *