கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் புதிய வெப்பநிலை 100 பரான்ஹீட் உச்சம் தொட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கோடை மழை வெப்பத்தின் தாக்கத்தை சற்று குறைந்துள்ளது.
ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சி மிகுந்த பானங்கள் பருகி வருகிறார்கள். குறிப்பாக நீர், நெங்கு, பதனி, தர்பூசணி பழச்சாறு, கரும்புச்சாறு போன்றவை மக்களின் தாகத்தை தணித்து வருகிறது. இதனால் அவற்றின் விற்பனை களை கட்டி வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருச்சி மாநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த வாரத்தில் ரூபாய் 15க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம் பழம் இந்த வாரம் ரூபாய் 20 வரை உயர்ந்துள்ளது. எலுமிச்சைபழம் வரத்து குறைந்ததாலும், வெளியூர்களில் இருந்து கொண்டு வர போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் 1000 எலுமிச்சம் பழம் 300 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1000 எலுமிச்சம் பழம் 10,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு பழம் குறைந்தபட்சம் 8 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments