Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அடிதடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடி வடக்கு பகுதியில் வசிக்கும் அய்யர்சாமி (30) மீது கடந்த 17.03.2026 அன்று அடிதடி சம்பவம் நடைபெற்றுள்ளது.
அன்று அய்யர்சாமி தனது இருசக்கர வாகனத்தில் பாரத் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ரஜபாண்டி (28), சாந்தகுமார் (26), ரவிக்குமார் (எ) படார் ரவி (27) ஆகியோர் அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.

பணம் இல்லை என்று கூறியதால், மூவரும் சேர்ந்து பட்டாக்கத்தியால் தாக்கி காயப்படுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அய்யர்சாமி அளித்த புகாரின் பேரில் துவாக்குடி காவல் நிலையத்தில் BNS சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குற்றவாளி சாந்தகுமார் மீது ஏற்கனவே 05.04.2026 அன்று தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும், மற்றொரு குற்றவாளியான ரவிக்குமார் (எ) படார் ரவியையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தார்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் தடுப்பு காவல் ஆணை பிறப்பித்து, 07.04.2026 அன்று சிறையில் இருந்த ரவிக்குமாரிடம் அது வழங்கப்பட்டது.மேலும், திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் இதுவரை மொத்தம் 39 பேருக்கு குண்டர் தடுப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*

    https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *