Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விபத்தில் காயமடைந்த காவலரை மருத்துவமனையில் சந்தித்த ஆதவ் அர்ஜுனா

த.வெ.க தலைவர் விஜய் இன்று திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட பின்பு அவருடன் வந்த கார்கள் அனைத்தும் புறப்பட்டது. அப்போது கார் ஒன்று அந்த கூட்டத்தில் வந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சதீஷ் என்பவர் மீது மோதியது

இதில் அந்த காவலருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் சதீஷை த.வெ.க நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சிகிச்சைக்கு அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் தான் செய்ய உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்து சென்றுள்ளார்.காவலர் சதீஷ் மீது மோதிய கார் ஆதவ் அர்ஜீனாவின் Voice of Common நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அதை ஆதவ் அர்ஜீனா அதை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
திருச்சிவிஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சிவிஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *