தென்கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில் ஆடிப்பூரம் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மட்டுவார் குலலம்மை (உற்சவர்) பிரகாரங்களில் வலம் வந்து மட்டுவார் குலம்மை சன்னதி முன்பு எழுந்தருளி செய்தார்.

தொடர்ந்து அம்பாள் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்கிட ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. தினசரி அம்பாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவிதிஉலா வரும் வைபவம் நடைபெறுவதுடன் முக்கிய நிகழ்வாக ஒன்பதாம்திருநாளான வருகிற 6ம் தேதியன்று சிறு தேரோட்டம் நடைபெறுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments