தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜக இடம்பெற்றுள்ளது பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள் – திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
அதிமுக பொதுச்செயலாளர் மேற்கொண்டு வரும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்கும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் சோதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியது இது தொடர்பாக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என பிரதமரிடம் மனு அளித்தேன் அது நேற்று அந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று பழைய நடைமுறைபடியே கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்கள் நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம். சுற்றுப்பயணத்தின் போது விவசாயிகள் வைத்த கோரிக்கையை நான் எல்லா இடங்களிலும் பேசினேன் ஆனால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, பிரதமரிடம் மனு அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான்.
அதிமுக கூட்டணியில் சசிகலா வந்தால் அதிமுக நிலைப்பாடு என்ன என்கிற கேள்விக்கு யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்த அந்த கட்சி தலைமையிடம் தான் கேட்க வேண்டும்.
வட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த போது வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு குறித்து பேசிய போது தென் மாவட்டங்களில் உங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு
அதெல்லாம் முடிந்து போன ஒன்று, இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம். இன்று இந்தியா முழுவதும்
மத்திய அரசு ஒரு நிலைப்பாடு எடுத்து விட்டார்கள்.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. அதனடிப்படையில் அந்த அந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள்.
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
1976 ல் எம்ரஜென்ஸி காலத்தில் கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். அதன் பின் பல முறை மத்தியில் ஆட்சி செய்த கட்சிகளுடன் திமுக கூட்டவி வைத்திருந்தார்கள். அப்பொழுது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள்.
தேசிய ஜனநாய கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க உள்ளது. பா.ஜ க உடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
Comments