Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வயலில் இறங்கி பெண்களுடன் நெல் நாற்று நட்டு நூதன முறையில் வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர் சரோஜா

துறையூர் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் சரோஜா வயலில் இறங்கி பெண்களுடன் நெல் நாற்று நட்டு நூதன முறையில் வாக்குகள் சேகரிப்பு-விவசாயக் கூலி தொழிலாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பாலகிருஷ்ணம்பட்டி

பகுதியில் விவசாயிகள் தங்களது வயலில் நாத்து நடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வாக்குகள் சேகரிக்க பரப்புரைக்கு சென்ற பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் சரோஜா வயல்வெளி பகுதியில் நாத்து நடு பெண்களிடம் வாக்குகள் சேகரிப்பதற்காக நூதன முறையில் அதிமுக வேட்பாளர் சரோஜா நாத்து நடும் பெண்களுடன் நாத்து நட்டு நான் ஒரு ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக்கு அதிமுகவில் வேட்பாளராக போட்டியிட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பு அளித்துள்ளார் என்றும், அவரளித்த தேர்தல் வாக்குறுதி குறித்து கூறியும் நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார், நாத்து நடும்

பெண்களிடம் அதிமுக வேட்பாளர் சரோஜா நாத்து நட்டு வாக்குகள் சேகரித்தது கூலி தொழிலாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,நாத்து நடும் ஏழை விவசாயிகளுக்கு அதிமுக சார்பாக வாய்ப்பு அளித்துள்ளது மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது என வாக்குகள் சேகரித்த சரோஜா தெரிவித்தார், உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல கலந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *