மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அகில இந்திய பிரச்சார இயக்கம், இன்று 31.08.2022, திருச்சி, ஜங்ஷன் பகுதி, வண்ணாரப்பேட்டை,கூணி பஜார் ,ஆகிய இடங்களில் இந்தியாவின் இருளை அகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் !! மக்கள். சந்திப்பு பிரச்சார இயக்கம், நடைபெற்றது.
வாக்குறுதிகளும் ஏமாற்றங்களும் ஒரு கோடி பேருக்கு வேலை எங்கே? 42 சதவீதம் வேலையின்மை தொட்டுவிட்டது 90 கோடி உழைப்பாளிகளில் சரி பாதி பேருக்கு வேலை கிடைக்காததால் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்.
பட்டினி நிறைந்த மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 101 வது இடம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்குவது நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது சர்வாதிகார போக்கோடு நடந்து கொள்கிறது. தேசத்தின் வளங்களையும் மக்கள் வாழ்வாதாரத்தை காத்திடவும், இந்தியாவின் மதசார்பற்ற, அடித்தளத்தை பேணி பாதுகாத்திடவும், அனைவருக்குமான பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்திடவும் மதவெறி வகுப்புவாத சக்திகளை. தனிமைப்படுத்திடவும் ஒன்றிணைந்து போராடுவோம் இந்தியாவின் இருளை அகற்றுவோம்!!
போன்ற வாசகங்களோடு பிரச்சாரம் ஆனது நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர், ரெங்கம்மாள், பகுதி குழு உறுப்பினர்கள், அப்துல் கையும், ஷேக் மொய்தீன் புறநகர், சிஐடியு .மாவட்ட துணைச் செயலாளர், சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, ஜங்ஷன் பகுதி செயலாளர் ரபீக் அஹமத், மற்றும் கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments