Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விழாவில் கல்லூரி ஓட்டுநர்களை பாராட்டிய ஆளூநர்

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டார்.  இதில் பேசிய ஆளுநர்….  திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஆண்டவன் கல்லூரி 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் பாரத நாடு 75வது சுதந்திர விழாவை கொண்டாடி வருகிறது. பாரதம் என்பது ஏதோ சாதாரணமான ஒன்று அல்ல. குறிப்பிட்ட மாநிலத்தை போல அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், தாய் பூமிக்கும் உதாரணமாக திகழ்ந்து வருவதே நம் பாரதம். பாரத நாடு என்பது பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக தெய்வ குடும்பம் என்று போற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்த நேரத்தில் என்னை அழைத்து வந்த ஓட்டுநர்களை நான் நினைவில் கொள்கிறேன். அமுதம் மற்றும் முருகநாதன்… அவர்கள் என்னை விட நம்மை விட உயர்வும் அல்ல … தாழ்வும் அல்ல நாம் அனைவரும் சரிசமமே. ((கல்லூரி ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் கூறிய ஆளுநர் )) பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா என்பது வெறும் மக்கள் தொகையில் நிறைந்து இருந்த நாடாக மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல. இன்று நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. உலகளாவிய பிரச்சனைகளுக்கு நம் பாரத நாடு தீர்வை கொடுக்குமா ? என்று பல நாடுகள் எதிர்பார்க்கக் கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இயற்கை பேரிடர்கள், கொரோனோ பரவல் நாடுகளுக்கு இடையே போர்கள் என்று பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. பொருளாதார ரீதியாக உயர்வாக உள்ள நாடையும் பார்க்க முடிகிறது. ஏழ்மையான சூழல் இருப்பதையும் பார்க்க முடிகிறது அதே போல் ராணுவப்படை பலம் அதிகம் உள்ள நாட்டையும் பார்கிறோம். சற்றே படை பலம் குறைவாக உள்ள நாட்டையும் பார்க்கின்றோம். ஆனால் கண்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து நமது பாரத நாடு ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டியது. அனைவரையும் ஒருங்கிணைத்து பாரதம் காட்டியது என்றால் அதுவே நம் பாரதிய சனதானத்தின் மதிப்பு. கொரோனா காலகட்டத்தில் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டோம் என்பது அனைவருக்கும் தெரியும் – குறிப்பாக ஊசி மருந்துகள் கிடைக்காமல் எத்தனையோ நாடுகள் போராடின .

ஆனால் நமது விஞ்ஞானிகளை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் – ஏனென்றால் நாம் சரியான நேரத்தில் ஏழை எளிய மக்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஊசி மருந்துகளை தயாரித்து வழங்கினோம் – மேலும் கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு ஊசியை பகிர்ந்து கொடுத்தோம்.  தட்பவெட்ப சூழல் மாற்றங்கள் உலகிற்கு பெரிய சவாலை கொடுத்து வரும் நிலையில் இதனை ஒரு பெரிய விஷயமாக பலர் கருதுவதில்லை. ஆனால் நமது பாரத நாடு அப்படி அல்ல தற்போது இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் எரிபொருளின் பயன்பாட்டை குறைத்து இயற்கை முறையில் (கீரீன் எனர்ஜி) நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டமிடலை உருவாக்கி வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50% பூரித்தி செய்ய இயற்கை எரி சக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வளர்ந்த நாடு எப்படி இதனை சாத்தியப்படுத்த முடியும் என்று பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்த வறுமை கல்வி, படிப்பறிவு இல்லமை, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது எந்த அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது என்பதனை பாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர். ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆயுஷ்மான் பாரத் வாயிலாக மருத்தும் கிடைக்கின்றது. சூரிய சக்தியின் வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு தலைநகரில் கொண்டு வந்தார். அப்போது அதன் அருமை பெருமை யாருக்கும் புரியவில்லை,

பல்வேறு நாடுகள் இந்த திட்டத்தை முழுமையாக நம்பவில்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டு பிரதமர் கொண்டு வந்திருந்த சர்வதேச சூரிய சக்தி நிறுவனம் தற்போது 120 நாடுகளுக்கு சென்று இருக்கிறது. 2016ம் ஆண்டு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி 2 ஜிகாவாட்டாக இருந்தது. ஆனால் இன்று 70  ஜிகாவாட்டாக மாறி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *