திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு மது போதையில் பேருந்தை தாறுமாறாக ஒட்டிய பொழுது அதில் பயணம் செய்த வயதானவர் கேட்டு கண்டித்துள்ளார்.
இதற்கு ஓட்டுனர் பேருந்து நிலையம் வந்தவுடன் உன்னை கவனித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு பேருந்து நிலையம் வந்தவுடன் அவரை கன்னத்தில் பளார் என அறிந்துள்ளார் அவரை ஆபாச வார்த்தையில் திட்டி உள்ளார் இது தொடர்பாக அந்த பெரியவர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பேருந்து ஓட்டுனர் நடத்துனர் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி தகவல் கொடுத்துள்ளனர்.
மது போதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதை கேட்ட வயதானவருக்கு பொதுமக்கள் மத்தியில் பேருந்து நிலையத்தில் பளார் என அறிந்த ஓட்டுனரை பலரும் கண்டித்து வருகின்றனர் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments