Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே ரூ.40 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகத் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பனையக்குறிச்சி பகுதியில் இன்று வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 


அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது:
வாக்குறுதிகளும் வளர்ச்சித் திட்டங்களும்
“கடந்த 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிதி நெருக்கடி மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு 10-ல் 3 வாக்குறுதிகளை மட்டுமே எங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், தற்போது ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு, சொன்ன 10 வாக்குறுதிகளில் 7-ஐ நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 3 திட்டங்களையும் வெற்றி பெற்ற பிறகு முழுமையாகச் செய்து முடிப்போம்.
குறிப்பாக, பனையக்குறிச்சி பகுதியில் மட்டும்:
சாலை வசதி – ரூ.89.82 லட்சம்
சமுதாயக்கூடம் – ரூ.20 லட்சம்
பள்ளிக்கூடம் – ரூ.40 லட்சம்
குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி – ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.3.11 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”
சஞ்சீவி நகர் பிரச்சனைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
“பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகர் பகுதி போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதற்கான டெண்டர் (ஒப்பந்தம்) விரைவில் விடப்படும்.”

 


மக்களுக்கான திட்டங்கள்
“விடியல் பயணம் (மகளிர் இலவசப் பேருந்து), புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இது அடுத்த கட்டமாக ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தைத் தடுக்க முயன்றபோது, அதனை முன்கூட்டியே அறிந்து மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.”
வெற்றி வாய்ப்பு
“2016-ல் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-ல் சுமார் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். வரும் 2026 தேர்தலிலும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, சேவகனாகப் பணியாற்றும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”


உற்சாக வரவேற்பு:
முன்னதாக பனையக்குறிச்சி பகுதிக்கு வருகை தந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, ஜல்லிக்கட்டு காளைகள் அணிவகுக்க, தாரை தப்பட்டை முழங்க, மலர் தூவிப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தலைமை செயற்குழு உறுப்பினர் . சேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, கழக நிர்வாகிகள் ரமேஷ் மகாதேவன் சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திலீபன், ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *