Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் பழுதாகி நின்ற கார் மீது மற்றொரு கார் மோதல் ஒருவர் உயிரிழப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், செவந்தாம்பட்டி கிராமத்தில் இன்று 15.05.22   மதுரை டு திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து நத்தம் செல்வதற்காக Call taxi கார்  டயர் பழுதானதாகி நின்ற போது மற்றொரு கார்  மோதியதில் விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த துரை (22) த .பெ முத்துச்சாமி ( இடது கால் கட்டை விரலில் காயம்)  மைதிலி (19) கோவிந்தராஜ் (நெற்றியில் காயம்) தீபா (45) (வலது கை மற்றும் நெற்றியில் காயம்)  கோவிந்தராஜ் ராமச்சந்திரன் (76) கோவிந்தராஜ், பானுமதி (65) ராமச்சந்திரன் ஆகிய நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீயணைப்பு வண்டியின் மூலம்  துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் ராமச்சந்திரன் என்பவர் இறந்து விட்டார்.இதில் பயணித்த மற்றவர்கள் மணப்பாறை குமரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *