Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் உதவி ஆய்வாளரை ப்ளார் விட்ட ஆசாமி

திருச்சி மாவட்டம் துறையூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஆய்வாளர் வடமலை இன்று மாலை திருச்சி மெயின் ரோட்டில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது  அந்த  நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் வடமலை அவரின் ஆவணங்களை கேட்டபொழுது மது போதையில் இருந்த ஆசாமி திடீரென போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளரை கன்னத்தில் திடீரென அறைந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

Live Link : https://youtu.be/-Mf0j2cDRhI

அவர்  இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார் வாகனத்தில் சோதனை செய்தபோது மது போதையில் இருந்த ஆசாமி பெயர் வேல்முருகன் என்றும் தந்தையின் பெயர் பரமசிவம் என்றோம் தெரிகிறது.

காவல்துறை உதவி ஆய்வாளர் கொடுத்த தகவலின் பேரில் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தப்பி சென்ற வேல்முருகனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் , காவல்துறையின் மீது தாக்குதல் நடந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில்  வேகமாக பரவி வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *