Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

100 நாள் வேலை திட்ட ஒழிப்பு முயற்சி: திருச்சியில் காங்கிரஸ் அமைதி பேரணி

திருச்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி ஒழிக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்து நடைபெறும் மண்டல அளவிலான மாபெரும் அமைதி ஊர்வலம் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் துவங்கி மரக்கடை வரை நடைபெற்றது.

இதில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கோடி கணக்கான மக்கள் வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார அந்தஸ்தை அடிப்படை உரிமை ஆக்கி உள்ளனர் குறிப்பாக ஒரு திட்டத்தால் பெண்கள் பழங்குடியின மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் கிராமப்புற வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது குறைந்த நிதி ஒதுக்கீடு ஊதிய வழங்குவதை தாமதப்படுத்துவது திட்டத்தை தீவிரமாக பாதிக்கிறது பொருளாதார உதவி வழங்காமல் மாநிலங்கள் மேல் சுமையை தெளிப்பது திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விக்குறியாகிவிடும்.

எனவே மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு உறுதி படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ் ராஜேஷ்குமார்.

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் எம் என் சூரஜ். நிவேதிக் அல்வா ஆகியோர் பங்கேற்றனர் மேலும திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் ஈ எம் சரவணன். தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த அமைதி பேரணியில் 2000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் மரக்கடை பகுதியில் மாபெரும் பாதயாத்திரை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *