Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கடத்த முயன்ற தொன்மையான சிலைகள் மீட்பு – நான்கு பேர் கைது

தஞ்சாவூர், பிப்ரவரி 10, 2026:
தமிழ்நாட்டின் தொன்மையான கோவில்களில் ஒன்றிலிருந்து திருடப்பட்ட சுமார் 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்து உலோகச் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற கும்பலைச் சேர்ந்த நான்கு பேரைச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இரவு, சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வலையபேட்டை அருகே தனிப்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த காரைச் சோதனை செய்தனர். அப்போது சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 செ.மீ உயரமுள்ள சுதர்சனர் (எ) விஷ்ணு சிலை மற்றும் 73 செ.மீ உயரமுள்ள தேவி சிலை ஆகிய இரண்டு தொன்மையான சிலைகளைக் கண்டறிந்து மீட்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன் மற்றும் ஜான்சன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில், இந்த சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்தி பெரும் விலைக்கு விற்க அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திருட்டில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கவும், இவை எந்தக் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறியவும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. வெற்றிகரமாகச் செயல்பட்ட தனிப்படையினரைச் சிலை திருட்டு தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


77.300 கிலோ எடை கொண்ட சுதர்சனர் (விஷ்ணு) மற்றும் 35.450 கிலோ எடை கொண்ட தேவி உலோகச் சிலைகள். இவை 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன் மற்றும் ஜான்சன் ஆகிய நால்வர்.
06.02.2026 அன்று வாகனத் தணிக்கையின் போது சிலைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மாருதி சுசுகி எர்டிக்கா கார் (TN 43 Q 5896) பறிமுதல் செய்யப்பட்டது.
முறையான ஆவணங்களின்றித் திருடப்பட்ட சிலைகளை மறைத்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி பெரும் லாபம் ஈட்டுதல்.
எதிரிகள் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; மேலும் சில குற்றவாளிகளைத் தேடும் பணி தொடர்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *