இன்று 25.01.2026-ம் தேதி காலை 09.00 மணி முதல் 28.01.2026-ம் தேதி காலை 09.00 மணி வரை திருச்சி மாநகரம், திருச்சிராப்பள்ளி இரயில் நிலையம் (TPJ) மற்றும் திருச்சிராப்பள்ளி மலைகோட்டை (TP) நிலையத்திற்கு இடையே உள்ள மேலபுதூர் – பாலக்கரை கீழ்பாலம் (Subway) பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதால் கீழ்க்கண்டவாறு மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பாலக்கரை நோக்கி வரும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் தலைமை தபால் அலுவலகம் மேலபுதூர் – காண்வென்ட் ரோடு – பீமநகர் – காவேரி தியேட்டர் பாலம் வழியாக பிரபாத் ரவுண்டானா வந்தடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் காந்திமார்கெட் வழியாக பிரபாத் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் பிரபாத் ரவுண்டானா வேர்ஹவுஸ் -முதலியார்சத்திரம் குட்ஷெட் பாலம் வழியாக சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேற்படி போக்குவரத்து மாற்றத்தினை பின்பற்றி சீரான போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களால் கேட்டுக்கொள்ப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments