Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மாநகர கமிஷனர் முன்னிலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு – திருச்சியில் சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு!!

தேசிய அளவில் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கு வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உத்தரவின்படி 32வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் முதல் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் அறிவுரையின்படி திருச்சி மாநகரத்தில் ‘32-வது சாலை பாதுகாப்பு மாத விழா’ திருச்சி மாநகர போக்குவரத்து தெற்கு

மற்றும் வடக்கு சரசகங்கள் மற்றும் அனைத்து காவல்நிலை நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Advertisement

இரண்டாம் நாளான நேற்று திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றின் மிக முக்கியமான 5 இடங்களான மன்னார்புரம் ரவுண்டானா சந்திப்பு, பஞ்சப்பூர் சந்திப்பு, எடமலைப்பட்டிபுதூர் ராணுவ மைதானம் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அப்பல்லோ அணுகுசாலை, பால் பண்ணை தஞ்சாவூர் சாலை சந்திப்பு ஆகிய படங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம், HME Consultant – NHAI ராஜதுரை, சுப்பிரமணியன் AHME Consultant – NHAI, கோபாலகிருஷ்ணன் Engineer NHAI, சரவணன் Safety Officer NHAI Trichy Region, சுரேஷ்குமார் DM City , TNSTC, செந்தில்குமார் ABM (Accident Prevention Wing), TNSTC மனோகரன், Traffic Inspector சுகுமார், Driving Instructor செல்வி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும சேகரன் Chairman Citizen Forum ஆகியோர்கள் பார்வையிட்டு விபத்தை தடுப்பதற்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கூறுகள் பற்றி கலந்தாலோசனை செய்தார்கள்.

Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *