திருச்சி அருகே இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம் திருச்சி செவிலியர் கல்லூரியில் B.Sc(N) மற்றும் DGNM முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர். சுஜா சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, திருச்சி மற்றும் சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.R.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.   
மேலும் இவ்விழாவில் டாக்டர் N.சேதுராமன் (தலைமை இயக்குனர்), டாக்டர்.N.மால்முருகன் (இயக்குனர்) மற்றும் டாக்டர். N. பாலசுப்ரமணியன் (துணை இயக்குனர்), டாக்டர்.S.ரேவதி (DEAN) உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். 
மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக அவசியம் என்று சிறப்பு விருந்தினர் சிறப்புரை ஆற்றினார். பெற்றோர் உட்பட சுமார் 500 மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் தேவி நன்றியுரை ஆற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments