தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுவரும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று அதிகாலை திருச்சி வந்தடைந்தார்.பின்னர் தனது மனைவி சீமா கோயலுடன் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று பெருமாளை வழிபாடுசெய்தார்.முன்னதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கோவில் தலைமை பட்டாச்சாரியார் சுந்தர் பட்டர் தலைமையில் சாலையை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது,

அதன்பின்னர் மூலவர் பெருமாளை தரிசித்து ஸ்ரீரங்கம் கோவில் யானை லட்சுமியிடம் ஆசீர்வாதம் பெற்றதுடன், பேட்டரி கார் மூலம் பிரகாரங்களை வலம்வந்து தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு பின்னர் நந்தவனம் பகுதியில் தனது மனைவியிடம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். அதன் பின்னர் தனது தரிசனத்தை நிறைவு செய்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments