திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் ராஜிவ்காந்தி (45). ராஜீவ் காந்தி பேரரசர் முத்தரையர் பேரவை, மாநில தலைவராக பதவி வகிக்கிறார்.
லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் ராஜிவ்காந்திக்கு சொந்தமான செங்கல் சூளையில் அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன்(51). இவரது மகன்கள் பிரசாத், சக்திவேல் என இரண்டு மகன்கள் என மூவரும் வேலை செய்து வந்தனர். சில தினங்களாக நாகேந்திரன் வேலைக்கு வராத்தால், ராஜீவ்காந்தி நாகேந்திரனை தாக்கியுள்ளார்.
இதனால் நாகேந்திரன் விஷம் குடித்தவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார். லால்குடி போலீசார் வழக்குபதிவு செய்து நாகேந்திரன் தற்கொலைக்கு காரணமான ராஜிவ்காந்தியை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments