இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவுவிழா -விடுதலை போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் 101வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 25.12.2025 மாலை 6 மணியளவில் புத்தூர் ஆட்டுமந்தை தெருவில் சிவானி பரதநாட்டியத்துடன் துவங்கியது. படையப்பா குழுவினரின் பறைஇசை முழக்கத்துடன் துவங்கிய

பொதுக்கூட்டம் பகுதிகுழு உறுப்பினர் N. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் .மாவட்ட குழு உறுப்பினர் க. முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட குழு உறுப்பினர் M. சுமதி , பகுதி குழு உறுப்பினர்கள் தில்லை K. நாகராஜ், P. காந்தி, R. சசிவர்ணம், P. துரைராஜ் முன்னிலை வகித்தனர் . மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் , மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா,

துணைச் செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநகர் மாவட்ட செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தியாகம் செய்த கட்சியின் முன்னோடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சி உரைவீச்சு நடத்திய தோழர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. கிளைச் செயலாளர் ரஹீம் நன்றி கூறினார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments