லோன் கேட்டு விண்ணப்பித்து 6மாதங்களாக இழுத்தடிக்கும் மத்திய கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்திருச்சி துறையூரை சேர்ந்த குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று தங்களது நிலத்தில் அடுத்ததாக பயிர் சாகுபடி செய்ய மத்திய கூட்டுறவு வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தும், வங்கிக்கான பங்குத்தொகையையும் வழங்கி ஆறு மாதங்கள் ஆகியும் லோன் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை சந்தித்து பலமுறை இது தொடர்பாக பேசியும் அதன் பின்னர் வங்கி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அப்போதைக்கு சமரசம் பேசி அனுப்பி வைத்த நிலையில், வங்கிக் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தை விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வங்கியினுள் நுழைய முயன்ற விவசாயியை வங்கி மேலாளர் தள்ளிவிட்டதால் விவசாயிகள் அனைவரும் தங்களுக்கான வங்கி கடன் வழங்க வேண்டும், விவசாயியை அவமானப்படுத்திய வங்கி மேலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வங்கி வாசலிலேயே அரைநிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments