ஜீயபுரம், திருச்சி மாவட்டம் குழுமணி அருகே உள்ள பேரூர் சங்கர் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 60க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு பொதுமக்கள் வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தார் சாலை வசதியும், போதுமான மின்சார தெருவிளக்கு வசதியும், காவிரி குடிநீர் வசதியும், மேல் நிலை நீர் தேக்க தொட்டியும் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மழை காலங்களில் போதுமான சாலை வசதி இல்லாததால் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்று பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பலரிடம் மனுக்கள் கொடுத்தும் உரிய சாலை அமைப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சங்கம் நகர் பகுதியில் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எங்கள் பகுதிக்கு எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தினால் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments