சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
ஹிந்தி மயமாகுதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மோடி அரசு குறியாக உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து நாங்கள் மட்டுமல்ல இந்தியாவின் பேசப்படுகிற அனைத்து மொழிகளும் பாதுகாப்பத வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.
மோடி அரசு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி ஒரே மதம் என்கிற வகையில் செயல்பட்டு வருவது பன்மை துவத்திற்கு ஆபத்தாக போய் முடியும்.
தேசிய அளவில் அவரவர் தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.
என்பதை சுட்டிக்காட்ட விளங்குகிறது.
இரட்டை எஞ்சின் டெல்லியில் ஒரு இன்ஜின், தமிழ்நாட்டில் ஒரு இன்ஜின் என்று சொல்லுகிறாரா என்ற தெளிவு தேவைப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் இயங்க முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு பின்னடைப்பு ஏற்படுத்தும அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிச்சாமி தமிழ்நாட்டில் பிரதமரின் தலைமையில் கூட்டணி ஆட்சி மலரும் என்று பேசி உள்ளார்.
அதிமுக ஆட்சி மலரும் என்ற நிலை மாறி இருப்பது கவலை அளிக்கிறது அதனை எண்ணி கவலைப்படுகிறோம்.
இன்று பாஜகவில் பிடிக்குள் அதிமுக சென்றுள்ளது.
ராமதாஸ் திமுக அணிக்குள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு?
அந்த ஆருடம் சொல்வதற்கு எனக்கு எந்த வசியமும், தேவையும் இல்லை அவருடைய நிலைப்பாடு அவருடைய கடமை கருத்து சொல்ல எதுவும் இல்லை. எங்களை பொறுத்தவரை 2011 பிறகு எடுத்த முடிவு. அதிமுக, பாஜக இருக்கிற இரு அணிகளில் இடம் பெறுவதில்லை.
அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ராமதாஸ் திமுக அணிவோடு இணைவது அதனை திமுக எடுக்க வேண்டிய முடிவு.
நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு தான் அதில் தெளிவாக உள்ளோம்.
விஜய் பாஜகவோடு எந்த அளவு உறவாடுகிறார் என்பதை நாம் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு நிலை ஆனால் பாஜக தலைமையிலான அரசையோ செயல்பாடுகளையோ அவர் கடுமையாக விமர்சிக்க வேண்டிய இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழும்புகிறது.
இந்த தேர்தலில் தனித்து தலைமை கூட்டணியை உருவாக்குவார். தனித்துப் போட்டு விடுவார் என நினைக்கிறேன்.
மத்திய அரசு திட்டங்களுக்கு அவர்கள் இதுவரைக்கும் நிதி ஒது உள்ளனர். மாநில அரசு திட்டங்களுக்கு கோரிக்கைகளுக்கு ஏற்க அவர்கள் நிதி ஒதுக்கவில்லை.
மாநில அரசு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி நிறுத்தி வைத்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையில் ஒப்பந்தம் போட வேண்டும் அப்படி என்றால் நிதி தருவோம் என அந்த துறையை சார்ந்த அமைச்சர் பேசி உள்ளார்.
மாநில அரசு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை அவர்கள் ஒதுக்கவில்லை அதைத்தான் தமிழ்நாடு முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார். இரண்டு இலக்கத்தில் கமல் சீட்டு கேட்பதாக கூறப்படுகிறது நீங்கள் எத்தனை இடம் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு
மூன்று இலக்கத்தில் கேட்க முடியாத என்பதால் இரண்டு இலக்கத்தில் கேட்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்திற்கு தேவை என்று நாங்கள் பார்க்கிறோம் எனக் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments