Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சரவணன் ஆய்வு

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவெறும்பூர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் குழு உடன் திருச்சி கலெக்டர் சரவணன் ஆலோசனை நடத்தினர்

தமிழகம் முழுவது ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு விநியோகம் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வரும் 6ம் தேதி வரை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு 7ம் தேதி வேட்பு மனு பரிசிலனைநடைபெறும் அதில் தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

9ம் தேதி க்குள் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கும் கடைசி நாள் ஆகும். அதன் பிறகு போட்டி இருப்பின் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும்

இந்த நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது முன்னேற்பாடு பணிகளை திருச்சி கலெக்டர் சரவணன் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் நேரில் கலந்து ஆலோசனை செய்தார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சரவணன் கூறியதாவது

திருவெறும்பூர் தொகுதிக்கு தேவையான வாக்குச்சாவடி இயந்திரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று பரிசோதனை நடந்தது

அது இன்று மாலை திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்திற்கு வரும் அதற்கு முன்பு முன்னேற்பாடு பணிகள் எந்த அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து பார்வையிட வந்ததாகவும் மேலும் வரும் திங்கட்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதாகவும் அதற்குரிய முன்னேற்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்ததாகவும் கூறினார்.

மேலும் தேர்தல் வாக்குச்சாவடியில் பணி ஆற்றும் அலுவலர்களுக்கு வரும் சனிக்கிழமை பயிற்சி நடைபெறும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய அவர்களுக்கு முன்பே பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது.

இந்த பகுதியில் பதட்டத்திற்கு உரிய பூத்துகள் எது என்பது கமிஷனக்கு அனுப்பி உள்ளதாகவும் எங்கிருந்த வந்த பிறகுதான் அது எது என தெரியவரும் என்றார்.

அப்போது திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் வழங்கல் அலுவலருமான அமுதா, திருவெறும்பூர் உதவி தேர்தல் அலுவலரும் தாசில்தார்மான கார்த்திகேயன், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *