Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஒத்தைக்கு ஒத்த வர்றியா : இது ஐதராபாத் குஸ்தி ! போட்டியிட தயாரா ராகுலுக்கு ஒவைசி சவால் !!

ஐதராபாத்தில் நடந்த ‘ஏஐஎம்ஐஎம்’ பொதுக்கூட்டத்தில் அதன் தலைவரும், அந்த தொகுதி எம்பி யுமான ஒவைசி ராகுலுக்கு சவால் விட்டு மோதத்தயாரா எனக்கேட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதிக்கு பதிலாக ஐதராபாத் தொகுதியில் போட்டியிட ராகுல் தயாரா ? என்று நான் அவருக்கு சவால் விடுகிறேன்.

நீங்கள் (ராகுல்) பெரிய அறிக்கைகளை விடுகின்றீர்கள். மைதானத்துக்கு வாருங்கள். என்னை எதிர்த்து போரிடுங்கள். காங்கிரசை சேர்ந்தவர்கள் நிறைய சொல்வார்கள். நான் தயாராக இருக்கிறேன். ராகுல் தயாரா ? பிரதமர் மோடிக்கு எதிராக நான் மட்டுமே போராடி வருகிறேன். பாஜகவுடன் காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு ஒவைசி பேசினார்.

“தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் ஒவைசிக்கு எதிராக அமலாக்க துறையின் எந்த வழக்குகளும் இல்லை. அவர்கள் இருவரும் பாஜகவின் சொந்தக்காரர்கள்’ என்று ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் ராகுல் பேசினார். அதற்கு பதிலடியாக ஒவைசி இப்படி பேசியுள்ளார். வீரலெட்சுமி சீமானுக்கு விட்ட சவாலுக்கே இன்னும் விடை தெரியல அதற்குள்ள அடுத்த சவாலா என்ன போங்கய்யா !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *